ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 13.5.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் கை ஓங்கும் நாள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

பரபரப்பாக செயல்படும் நாள். பாதியில் நின்ற பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

ரிஷபம்

தேவைகள் பூர்த்தியாகும் நாள், திடீர் வரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புது அதிகாரிகள் உங்களை பாராட்டுவர்.

மிதுனம்

யோகமான நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். சொந்த பந்தங்களின் பாராட்டு மழையில் நனையும் வாய்ப்பு உண்டு.

கடகம்

உள்ளம் மகிழும் செய்தியொன்று வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பாகப்பிரிவினைகள் நல்ல விதமாக முடியும்.

சிம்மம்

வாய்ப்புகள் கைநழுவி செல்லும் நாள், வரவைவிட செலவு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறை கண்டு பிடிப்பர்.

கன்னி

எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. தொழிலை விரிவுபடுத்த பிறரின் உதவியை நாடுவீர்கள். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள்.

துலாம்

பற்றாக்குறை அகலும் நாள். தொழில் தொடங்கும் சிந்தனை வெற்றி பெறும். வியாபாரத்தில் உங்களுக் கென்று தனிப்பாதை அமைத்துக்கொள்வீர்கள்.

விருச்சிகம்

உதவிக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உயரும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

தனுசு

7 சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். ஆக்கப்பூர்வமான காரியமொன்றை செய்துமுடிப்பீர்கள்.

மகரம்

தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தனவரவு திருப்தி தரும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்

சந்தோஷ வாய்ப்புகளை சந்தித்து மகிழும் நாள். தொழிலை விரிவுபடுத்த புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் லாபம் கிட்டும்.

மீனம்

வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். விட்டுப்போன உறவுகள் விரும்பி வந்து சேரும்.