ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 11.5.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு திருமண முயற்சி கைகூடும் நாள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

இனிய இனிய தகவல் வந்து சேரும் நாள். பயணத்தில் பால்ய நண்பர் ஒருவரை சந்தித்து மகிழ்வீரகள். குடும்பத்தாருடன் ஏற்பட்ட கோபதாபங்கள் விலகும்.

ரிஷபம்

கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங் காகும் நாள். குடும்பத்தில் குதுாகலம் தரும் சம்பவம் நடை பெறும். உத்யோகத்தில் இடைவிடாது செய்த முயற்சிக்கு இப்போது பலன் கிடைக்கும்.

மிதுனம்

பாராட்டும், புகழும் கூடும் நாள். உடன்பிறப்புகள் கேட்ட உதவி களை மறுக்காமல் செய்வர். பெற்றோரின் நலனில் அக்கரை காட்டுவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.

கடகம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்ய இயலாது. அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது. ஆரோக்கியம் சீராக செலவிடுவீர்கள்.

சிம்மம்

சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். திருமண முயற்சி கைகூடும்.

கன்னி

இனிமையான நாள், இல்லத் தில் நல்ல சம்பவங்கள் நடை பெறும், தொழிலில் அனுபவம் மிக்க பங்குதாரர்கள் வந்தி 2 ணைவர், புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

துலாம்

ஒளிமயமான எதிர்காலத் திற்கு உறுதுணைபுரியும் நாள், பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை தீரும். கடந்த சில நாட்களாக ஏற் பட்ட காரியத்தடை அகலும்.

விருச்சிகம்

வெற்றிச் செய்திகள் வீடுதேடி வரும் நாள். இடம், வாங்கும் முயற்சி கைகூடும். நிகழ்கா லத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.

தனுசு

அலைபேசி மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். பழைய பாக் கிகள் வசூலாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

மகரம்

அமைதியாக செயல்பட வேண் டிய நாள். எதையும் ஒருமு றைக்குப் பலமுறை எதையும் யோசித்துச் செய்வது நல்லது. வாயில் தேடி வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம்.

கும்பம்

தொட்டது துலங்கும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

மீனம்

புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.