ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 8.5.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் பெருகும் நாள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

தேவைகள் பூர்த்தியாகும் நாள். திட்டமிட்டபடியே சில காரியங்கள் நடைபெறும். தனவரவு திருப்தி தரும். பகையான நட்பு உறவாகும். சுபச்செய்திகள் வந்து சேரும்.

ரிஷபம்

வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். செலவுகள் அதிகரித்தாலும், எதிர்பார்த்தபடி வரவு வந்து சேரும்.

மிதுனம்

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள், தொழில் போட்டிகள் அதிகரிக்கும், விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.

கடகம்

செல்வாக்கு உயரும் நாள். முன்னேற்றப்பாதை புலப்படும். கல்யாணக் கனவுகள் நனவாகும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

சிம்மம்

பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள், பாசம் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

கன்னி

மனக்கவலை மறையும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள், பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம்

வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றி தகவல் உண்டு. புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.

விருச்சிகம்

சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும்.

தனுசு

யோகமான நாள். பொருளாதார நிலை திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் உண்டு. சுணங்கிய காரியங்கள் இன்று நடைபெறும்.

மகரம்

குடும்பச்சுமை கூடும் நாள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

கும்பம்

நினைத்தது நிறைவேறும் நாள், அதிகாரிகளால் ஏற்பட்ட அல்லல் அகலும். எந்தக் காரியத்தையும் எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள்.

மீனம்

வருமானம் பெருகும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வர்.