ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 2.5.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு பிள்ளைகளால் பெருமை சேரும் நாள்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

கனவுகள் நனவாகும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசுவழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

ரிஷபம்

வியக்கும் தகவல் வீடுவந்து சேரும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். சொத்து சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

மிதுனம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். லட்சியப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.

கடகம்

அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நாள். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

சிம்மம்

சிக்கனத்தைக் கடைப்பிடித்துச் சிறப்படையும் நாள். தேக ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்துசேரும்.

கன்னி

பணியில் இருந்து வந்த தொய்வு அகலும் நாள். இல்லத்தில் இனிய சம்பவமொன்று நடைபெறும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள்.

துலாம்

அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். குடும்பத்தினர்கள் உங்கள் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பர்.

விருச்சிகம்

உற்சாகம் உள்ளத்தில் குடிகொள்ளும் நாள். நல்ல செய்திகள் காலை நேரத்திலேயே வந்து சேரும். விலை மதிப்பு மிக்க பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு

பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். பிரச்சனைகள் படிப்படியாக மாறும். வரவு திருப்தி தரும்.. பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

மகரம்

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

கும்பம்

மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதிர்பாராத விரயம் உண்டு. தொழில் தொடர்பாக அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். பழைய கடன்களைக் கொடுத்து மகிழ்வீர்கள்.

மீனம்

சஞ்சலங்கள் அதிகரிக்கும் நாள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது குறைசுமத்துவர்.