rasipalan 
ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 17.3.2026 - இந்த ராசிக்காரர்கள் சொத்துகள் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை இங்கு அறிந்து கொள்வோம்.

மாலை மலர்

மேஷம்

முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

ரிஷபம்

கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். சொத்துகள் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.

மிதுனம்

வருமானம் திருப்தி தரும் நாள். உறவினர்களின் வழியில் நல்ல தகவல் வந்து சேரும். புதிய பங்குதாரர்களால் பொருளாதார விருத்தி உண்டு.

கடகம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். திடீரென கேட்கும் செய்திகளால் திகைப்படைவீர்கள். விரயங்கள் கூடும். இடமாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும்.

சிம்மம்

வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்துகொள்ளும் நாள். பிரியமான சிலரை தேடிச்சென்று சந்திப்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

கன்னி

யோகமான நாள். அருகில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும்.

துலாம்

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். புதிய உத்தியோகத்திற்காக செய்த முயற்சி வெற்றிபெறும். வாழ்க்கைத் துணைவழியே வந்த பிரச்சனை அகலும்.

விருச்சிகம்

தொட்டது துலங்கும் நாள். வருமானம் திருப்தி தரும். எதிர்பார்த்த காரியம் இன்று நடைபெற்று மகிழ்ச்சி தரும். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும்.

தனுசு

நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். திட்டமிட்ட பணிகளில் சிறு மாற்றம் செய்வீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

மகரம்

கனிவாகப்பேசி காரியங்களை சாதிக்கும் நாள். உங்களை புரிந்து கொள்ளாமல் செயல்பட்ட சிலர் மனம் மாறுவர். நண்பர் ஒருவர் நல்ல காரியத்திற்கு துணையாக இருப்பர்.

கும்பம்

உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். கடன்சுமை குறைய புதிய யுக்திகளை கையாள்வீர்கள்.

மீனம்

புதிய பாதை புலப்படும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். அலைபேசி வழியில் அதிகாரிகள் நல்ல தகவல் தருவர்.