ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 12.5.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

அலைச்சல் கூடும் நாள். எதிலும் அவசரத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். குடும்பப் பொறுப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு கிட்டும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். கொடுத்த பாக்கிகள் வசூலாகும்.

மிதுனம்

மாற்று கருத்துடையோர் மனம் மாறும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு.

கடகம்

திடீர் விரயங்களால் மனக்கலக்கம் ஏற்படும். தொழிலில் பங்குதாரர்கள் தொல்லை தருவர். அலுவலகத்தில் சக பணியாளர்களால் வீண்பழிகள் வரலாம்.

சிம்மம்

மனக்குழப்பம் ஏற்படும் நாள். வீண் விரயங்கள் உண்டு. மற்றவர்களை முழுமையாக நம்ப வேண்டாம். முன்கோபத்தால் முன்னேற்றப் பாதிப்பு உண்டு.

கன்னி

புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். கடிதப் போக்குவரத்து கனிந்த தகவலைத் தரும். புண்ணிய காரியங்களுக்காக செலவிடுவீர்கள்.

துலாம்

வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.

விருச்சிகம்

வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் வெற்றி நடைபோடும். வருமானம் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாகவே இருக்கும்.

தனுசு

இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

மகரம்

தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

கும்பம்

நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். இடமாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.

மீனம்

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். குடும்பச்செலவு கூடுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்பட இயலாது.