ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 10.4.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். சொத்துகளால் லாபம் உண்டு.

ரிஷபம்

திட்டமிட்ட காரியம் திசைமாறி செல்லும் நாள். திடீர் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் கூடும். நட்பு பகையாகலாம்.

மிதுனம்

மனக்குழப்பம் ஏற்படும் நாள். சந்தர்ப்பங்கள் கைநழுவி செல்லும். உறவினர் பகையால் உள்ளத்தில் மகிழ்ச்சி குறையும். வரவைவிட செலவு கூடும்.

கடகம்

செல்வாக்கு மேலோங்கும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டு.

சிம்மம்

வளர்ச்சி கூடும் நாள். வரவு திருப்தி தரும். பிள்ளைகளின் வழியில் பெருமைக்குரிய சம்பவங்கள் நடைபெறும். பொதுநல ஈடுபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி

அமைதியை கடைப்பிடிக்க வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன பராமரிப்புச் செலவு உண்டு.

துலாம்

நல்லது நடக்கும் நாள். உடல்நலம் சீராகும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.

விருச்சிகம்

வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வெளி வட்டார பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு பிற இனத்தாரின் ஒத்துழைப்பு உண்டு.

தனுசு

கவலைகள் தீரும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வரலாம்.

மகரம்

கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் நாள். வருமானம் திருப்தி தரும். நீண்ட நாட்களாக நிறைவேறாத காரியமொன்று இன்று நிறைவேறும்.

கும்பம்

சந்தோஷமான தகவல் கிடைக்கும் நாள். தடைகள் அகலும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

மீனம்

யோகமான நாள். உறவினர்கள் வழியே வந்த பிரச்சனை அகலும். எதை எதிர்பார்த்து காத்திருந்தீர்களோ அந்த காரியம் எளிதில் முடிவடையும்.