ரிஷபம்- வார ராசிபலன் 
ரிஷபம் - வார பலன்கள்

ரிஷபம்- வார ராசிபலன் 7.6.2026 முதல் 13.6.2026 வரை

உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

ரிஷபம்

திட்டமிட்டு செயல்படும் வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தில் செவ்வாயின் பார்வையில் குருவுடன் சேர்க்கை பெற்றுள்ளார்.கடந்த கால சிந்தனைகளை விட எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் அதிகமாகும். சகல நன்மைகளும் அடையக் கூடிய காலம். திட்டமிட்டு வெற்றி பெற குடும்ப உறவுகள் உதவுவார்கள்.

செல்வாக்கு, புகழ் ஆகியவை கூடும். பணவரவு உயரும். தொழிலில் வெற்றி நடை போடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சிலர் கடல் கடந்து சென்று பொருளீட்டலாம். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திரப் பேறு கிடைக்கும்.

சுப விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.மன இறுக்கம் குறையும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நிலவிய நெருக்கடி நிலை நீங்கும்.சுப செலவிற்காக விண்ணப்பித்த கடன் தொகை இந்த வாரத்தில் கிடைத்துவிடும்.சிலருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி,

செல்: 98652 20406