பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி புதனுடன் சேர்க்கை பெற்றுள்ளார் தன வரவில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். பணவரவு தாராளமாக இருக்கும். மகிழ்ச்சியும், சந்தோஷமும் குதூகலமும் அதிகரிக்கும். துக்கம் குறையும். ஏமாந்த தொகை கைக்கு வரும். தொட்டது துலங்கும். அனுபவப் பூர்வமாக பேசுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக நிறைவேறும். 1.6.2026 அன்று இரவு 7.08 முதல் 4.6.2026 அன்று காலை 7.41 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் வேலை பளு கூடும். அருகம்புல் சாற்றி விநாயகரை வழிபடவும்.