உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் காலம். ராசி அதிபதி சுக்கிரன் நீச்சபங்க ராஜயோக பெறுகிறார். உங்களின் கற்பனை, கனவுகள் நனவாகும். தொழில், உத்தியோகத்தில் நிலவிய நெருக்கடிகள் விலகி மேன்மைகள் உண்டாகும். சிலருக்கு பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். வாடகைக்கு போகாமல் இருந்த அசையாச் சொத்துக்களுக்கு புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள். விவசாயிகளுக்கு தடைபட்ட குத்தகைப் பணம் கிடைக்கும். சிலர் சொத்தை அடமானம் வைத்து முதலீட்டை அதிகரிப்பீர்கள். இழுபறியில் நின்ற தந்தைவழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும். புதிய தொழில் முயற்சியில் அனுபவஸ்தர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது உத்தமம். சுகம், மற்றும் அதிர்ஷ்டத்தின் மேல் நாட்டம் அதிகரிக்கும். குல தெய்வ அனுகிரகம் உள்ளது. 12.11.2026 அன்று அதிகாலை 2.19க்கு சந்தி ராஷ்டமம் ஆரம்பிப்பதால் நினைப்பதற்கு மாறான பலன்களை நடத்தும் என்பதால் சிந்தித்து செயல்பட வேண்டும். சஷ்டி விரதம் இருந்து முருகனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.