ரிஷபம் - வார பலன்கள்

ரிஷபம்- 2026 வார ராசிபலன் 4.10.2026 முதல் 10.10.2026 வரை

சொத்துதகராறு, பாகப்பிரிவினை போன்றவற்றால் மன சஞ்சலமும் உண்டாகும்.

ரிஷபம்

சுமாரான வாரம். ராசி மற்றும் 6ம் அதிபதி சுக்ரன் வக்ரம் பெறுவதால் கடன் தொகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். தொழில், உத்தியோகம் போன்றவற்றில் சிறு சுணக்கம் உண்டாகும்.தாய் வழி உறவுகளை, தாய்மாமனை, அனுசரித்துச் செல்ல வேண்டும். புதிய தொழில் ஒப்பந்தம் மற்றும் முதலீடுகளில் கவனம் தேவை. வாழ்க்கை துணையுடன் நிலவிய கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு பிரிவினைகள் ஒரு முடிவிற்கு வரும். உங்கள் மனம் விரும்பும் தீர்வு இப்பொழுது கிடைக்கும். சொத்துதகராறு, பாகப்பிரிவினை போன்றவற்றால் மன சஞ்சலமும் உண்டாகும். வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம் உண்டாகும். ஆரோக்கியம் மேன்மையடையும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இன்சூரன்ஸ் பாலிசி முதிர்வுத் தொகை கிடைக்கும். சிலர் புதிய பாலிசி எடுப்பார்கள். தந்தைக்கு கண், இருதயம் தொடர்பான சிகிச்சை செய்ய நேரும். உயர் ஆராய்ச்சி கல்வி படிப்பில் ஏற்பட்ட தடைகள் அகலும். வீண்செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது நல்லது. போட்டிகளைச் சமாளித்து கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். மஹாளய அமாவாசை அன்று சர்க்கரைப் பொங்கல் தானம் வழங்கவும்

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT