ரிஷபம் - வார பலன்கள்

ரிஷபம்- 2026 வார ராசிபலன் 30.8.2026 முதல் 5.9.2026 வரை

உங்கள் பெயரில் எதிரிகள் ஏற்படுத்திய கடன் தொல்லை அகலும்.

ரிஷபம்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியாகவும் சிறப்பானதாகவும் நடந்து முடியும். ராசி அதிபதி சுக்கிரன் வார இறுதியில் ஆட்சி பலம் பெறுகிறார். வியாபாரிகளுக்கு வருமானம் இரட்டிப்பாகும். வெளியூர் வேலைக்கு சென்ற சிலர் வேலை பிடிக்காமல் சொந்த ஊருக்கே திரும்புவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நிலுவையில் உள்ள பழைய சம்பள பாக்கிகள் வசூலாகும். சிலர் கண்களில் அறுவை சிகிச்சை செய்யலாம். அரசின் நலத்திட்டத்தில் வீடு, மனை கிடைக்கும். உங்கள் பெயரில் எதிரிகள் ஏற்படுத்திய கடன் தொல்லை அகலும். வருமானத்தில் பெரும் பங்கு கடனுக்கு செல்கிறதே என்று வருந்திய நிலைமாறும். கடன், நோய், எதிரி தொல்லை அகலும். நான்கில் கேது மற்றும் 10-ல் ராகு உள்ளதால் அரசியல்வாதிகள் கூட்டணி கட்சிகளுடன், நண்பர்களுடன் எச்சரிக்கையாக பழக வேண்டும். துரோகங்கள், ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளை உங்களின் நேரடி கவனிப்பில் வைத்திருப்பது அவசியம். பார்த்துச் சென்ற வரனிடம் சாதகமான பதில் வரும். பவுர்ணமி அன்று விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406