ரிஷபம் வார ராசிபலன் 
ரிஷபம் - வார பலன்கள்

ரிஷபம்- 2026 வார ராசிபலன் 28.6.2026 முதல் 4.7.2026 வரை

பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவு படுத்துவீர்கள்.

ரிஷபம்

திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் வெற்றி ஸ்தானத்தில் குருவுடன் சஞ்சரிக்கிறார். எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு.தேவையற்ற அலைச்சல், டென்ஷன் விலகி சகல விதமான மாற்றங்களும் ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவு படுத்துவீர்கள். படிப்பை பாதியில் விட்டவர்கள் மீண்டும் தொடர வாய்ப்புள்ளது. புதிய அசையும், அசையாச் சொத்துக்கள் சேரும். அரசு உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வை சந்திக்கலாம். பொருளாதார ரீதியாக சாதகமான பலன்கள் உண்டு. திருமண முயற்சிகள் வெற்றிதரும். தம்பதிகள் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவார்கள்.கண்திருஷ்டி பாதிப்பு அகலும்.உடல் நலனில் ஏற்பட்ட பாதிப்பு குறையும்.29.6.2026 அன்று நள்ளிரவு 1.09 முதல் 1.7.2026 அன்று பகல் 1.31 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சில மனசஞ்சலங்கள், இனம் புரியாத கவலை ஏற்படலாம். உடல் சோர்வால் சுறுசுறுப்பு குறையும்.யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.நாளும் சுப பலன்களை அதிகரிக்க பௌர்ணமி அன்று ஆஞ்சநேயரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406