ரிஷபம் - வார பலன்கள்

ரிஷபம்- 2026 வார ராசிபலன் 25.10.2026 முதல் 31.10.2026 வரை

அறிமுகம் இல்லாதவர்களிடம் உங்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

ரிஷபம்

கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. ராசி அதிபதி சுக்கிரன் தனது மற்றொரு வீடான துலாம் ராசியில் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். புதிய தொழில் ஒப்பந்தங்களில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. சிலர் உத்தியோக நிமித்தமாக பூர்வீகத்தை, குடும்பத்தை விட்டுப் பிரியலாம். உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணியில் சேர உத்தரவு வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தரும். தடைபட்ட பதவி உயர்வு தற்போது கை கூடும். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் உங்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். முக்கிய ஆவணங்கள், ஆபரணங்களைக் கவனமாக கையாளவும். பொது வாழ்வில் இருப்பவர்களின் புகழ், அந்தஸ்து மேலோங்கும். ஆரோக்கிய தொல்லைகள் வைத்தியத்தில் சீராகும். சுய ஜாதக ரீதியாக நல்ல தசா புத்தி நடந்து கொண்டு இருந்தால் எந்த பாதிப்பும் இருக்காது. எனவே தேவையற்ற பயத்தை தவிர்க்கவும். பௌர்ணமி அன்று மகாலட்சுமியை வழிபடவும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT