ரிஷபம் - வார பலன்கள்

ரிஷபம்- 2026 வார ராசிபலன் 18.10.2026 முதல் 24.10.2026

அனைத்து முயற்சிகளும் பெரிய வெற்றியை தரும்

ரிஷபம்

திட்டங்கள், எண்ணங்கள் செயலாக்கம் பெறும் வாரம். 4ம் அதிபதி சூரியன் 2,5ம் அதிபதி புதனுடன் சேர்ந்து புத ஆதித்ய யோகம் பெறுகிறது. எதற்கும் முடிவு காண முடியாமல் தவித்த நிலை மறையும். அனைத்து முயற்சிகளும் பெரிய வெற்றியை தரும். உற்றார், உறவுகளிடம் சுமூகமான நிலை நீடிக்கும். சமூக அந்தஸ்தும் கவுரவமும் உயரும். குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். தன வரவில் தன் நிறைவு ஏற்படும். செய்யும் தொழிலில் லாபம், முன்னேற்றம் உண்டாகும். சிலர் தொழில் முதலீட்டை அதிகரிக்க கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். இடமாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றல் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச்சந்தை ஆதாயம் உண்டு. புதிய சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். திருமணம் பற்றிய நல்ல தகவல்கள் கிடைக்கும். மறுதிருமணம் முயற்சி பலன் தரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். 18.10.2026 அன்று இரவு 7.33 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களால் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. சிலருக்கு மருத்துவச் செலவு உண்டாகலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு, உடை தானம் வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT