ரிஷபம் 
ரிஷபம் - வார பலன்கள்

ரிஷபம்- 2026 வார ராசிபலன் 15.11.2026 முதல் 21.11.2026 வரை

கடுமையான முயற்சியையும் போராட்டத்தையும் சந்தித்த காலம் முடியும்.

ரிஷபம்

எதிர்காலம் பற்றிய நல்ல முடிவு கிடைக்கும் வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் நீச்ச பங்க ராஜயோகத்தில் சஞ்சரிக்கிறார். சமுதாய அந்தஸ்து உயரும். கவுரவப் பதவி கிடைக்கும். இது பொருளாதார வளர்ச்சியையும் ஏற்றத்தையும் தரக்கூடிய அமைப்பாகும். தாராள தன நிறைவு உண்டாகும். குடும்ப உறவுகளிடம் மதிப்பு மரியாதை கூடும். இழுபறியாக இருந்த முயற்சிகள் வெற்றி தரும். ஸ்திர சொத்துக்கள் சேரும். இதுவரை சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற அமைப்பு உருவாகும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புத்திரப் பேறு உண்டாகும். வெற்றி கை நழுவும் போது புகழ் மரியாைதை குறையும் என்பதை உணர்வீர்கள். கடுமையான முயற்சியையும் போராட்டத்தையும் சந்தித்த காலம் முடியும். குறைந்த உழைப்பில் அதிக வருமானம் கிடைக்கும். 15.11.2026 அன்று அதிகாலை 3.11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்ப கடமைகளை நிறைவேற்ற முடியாமல் திணறுவீர்கள். கிருஷ்ணரை வழிபடுவதால் குடும்ப இன்னல்கள் குறையும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT