ரிஷபம் வார ராசிபலன் 
ரிஷபம் - வார பலன்கள்

ரிஷபம்- வார ராசிபலன் 14.6.2026 முதல் 20.6.2026 வரை

பணவசதி சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

வெற்றிகரமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் முயற்சி ஸ்தானத்தில் உள்ள உச்ச குருவுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இதற்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். தைரியத்துடன் மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும். அதிர்ஷ்ட பொருள், பணம், உயில் சொத்து கிடைக்கும். திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். பணவசதி சிறப்பாக இருக்கும்.

வீடு கட்டும் பணி துரிதமாகும். சிலர் வீட்டு மனை அல்லது புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். குடும்ப செலவிற்கு தேவையான பணம் தாராளமாக கிடைக்கும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகையாகும். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும். அரசியல் பிரமுகர்கள் தொண்டர்களிடம் நல்லுறவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். திருமண வயதில் உள்ள மகன் மகளின் திருமணம் முயற்சிகள் சாதகமாக முடியும். வெள்ளிக்கிழமை வெள்ளை மொட்சை தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406