ரிஷப ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கோச்சார சனி பகவான் 27.7.2026 முதல் 10.12.2026 வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். ரிஷப ராசிக்கு 9,10ம் அதிபதியான சனி பகவான் வக்ர காலத்தில் என்ன பலன் தரப் போகிறார் போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் காணலாம். அரசு உத்தியோக முயற்சி இழுபறியாகும். புதிய தொழில் முயற்சியில் அதிக கவனம் தேவை. முக்கிய பண பரிவர்த்தனைக்கு உரிய ஆவணங்களை கவனமாக பராமரிக்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. மறைமுக வருமானம் ஈட்டுவதையும், சட்டத்திற்கு புறம்பான செயல்களை தவிர்க்கவும். விபத்து, கண்டம், சர்ஜரி, அவமானம் போன்ற பாதிப்புகள் குறையும். முக்கிய பஞ்சாயத்துகள் வழக்குகள் இழுபறியாகும். மூத்த சகோதரம், சித்தப்பாவை பகைக்காமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் புரிபவர்கள் அதிக முதலீட்டில் பெரிய தொழில் நடத்துபவர்கள் சுய ஜாதக பரிசீலினை செய்து கொள்வது நல்லது. சிலருக்கு விபரீத ராஜயோக அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடி வரும். ஜனன கால ஜாதகத்தில் வலிமையான தசாபுத்தி நடப்பவர்–களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வயதான ரிஷப ராசியினருக்கு பேரன் பேத்தி கிடைக்கும். எதிர்பாராத வகையில் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
ரிஷப ராசிக்கு 2,5ம் அதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் வக்ரமடையும் போது சிலருக்கு அதிர்ஷ்டக் குறைவு மிகுதி–யாகும். எந்தக் கஷ்டம் வந்தாலும் பூர்வீகத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தவர்கள் கூட வாழ்வாதா ரத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியே செல்லும் சூழ்நிலையை ஏற்படுத்துவார்கள். பூர்வீக சொத்து தொடர்பான வம்பு வழக்கு தொடரும். தந்தைக்கு ஆரோக்கிய குறைபாடு அதிகரிக்கும். சிலர் தந்தையை பிரிந்து செல்ல நேரும் அல்லது தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். பிள்ளைகளின் அன்பும்,ஆதரவும் கிடைக்கும். திருக்கோவில்களைச் சுற்றி தொழில் ஸ்தாபனம் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் மிகுதியாக இருக்கும். குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று குல வழக்கப்படி பூஜை செய்யும் பாக்கியம் கிடைக்கும். பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.ஆன்றோர்கள் சான்றோர்களின் நல்லாசி கிடைக்கும்.ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். கலை துறையினர் புதிய ஒப்பந்தங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும்.வெளிநாட்டுச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாட்டில் வாழும் மகன், மகள் பேரன் பேத்திகளிடம் சென்று ஆறு மாத காலம் தங்கி வருவார்கள்.
ரிஷப ராசிக்கு 9, 10ம் அதிபதியான சனிபகவான் தனது சுய நட்சத்திர சாரத்தில் வக்ரமடையும் காலத்தில் பதவி, அரச வெகுமதி , வீடு வாகன யோகம், குலத்தொழில், உயர்ந்த அந்தஸ்து, தீர்க்க ஆயுள், சலிக்காத உழைப்பு, தைரியம் போன்றவற்றால் மட்டுமே நன்மையை அதிகரிக்க முடியும். இது கடின உழைப்பிற்கான பலனைத் தாமதமாகத் தந்தா லும், உறுதியான வெற்றியைத் தேடித்தரும். மூத்த சகோதரர்கள், நண்பர்கள் மற்றும் சமூகத்தின் மூலம் உதவிகள் கிடைக்கும். கடின உழைப்பால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெற முடியும்.சில ஆசைகள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேற நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். சிலருக்கு விரக்தி மனப்பான்மை அதிகரிக்கும்.மூத்த சகோதரம், பங்காளிகள் பூர்வீக சொத்து பிரச்சனையால் சர்ச்சைகள் உண்டு. உப ஜெய ஸ்தானத்தில் நிற்கும் சனிபகவான் தொழிலில் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் லாபத்தை கொடுத்தாலும் வலுவான தார தோஷத்தையும் ஏற்படுத்தும். சிலர் தவறான காமத்தால் பொன் பொருளை பிறருக்கு கொடுத்து வாழ்க்கையை இழந்து கர்மவினையை அனுபவிப்பவர்கள்.
கோச்சார குரு பகவான் சாதகமாக இருப்பதால் திருமணத்தடை அகலும். விவகாரத்து வழக்குகள் ஒத்திப்போடப்படும் அல்லது வீட்டு பெரியோர்கள் முன்நிலையில் பேசி முடிக்கப்படும்.
மனதைரியத்தை தருவார்.சிற்றின்ப நாட்டம் அதிகரிக்கும்.அலைச்சல் மிகுந்த பயணம் ஏற்படும்.எதையும் சாதிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். தாய் மற்றும் தாய் வழி உறவுகளிடம் இருந்த பகைமை மாறும்.தாயின் நல்லாசி கிடைக்கும்.தாய்வழி பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் தாயின் ஆதரவு உங்களுக்கே இருக்கும். தாயின் ஆரோக்கியம் சீராகும். கணவரின் ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிர்பாராத தனலாபம்,உயில் சொத்து , பிள்ளையில்லாத சொத்து கிடைக்கும்.குழந்தைகளின் மதி நுட்பம் உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். தவறான காதல் நட்பில் இருந்த உங்கள் குழந்தை மனம் மாறி குல கவுரவத்தை காக்கும்.
தொழில் கூட்டாளி கள் ஒருவர் விஷயத்தில் மற்றவர் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில் கூட்டாளிகள் மற்றும் நண்பர்களால் ஏற்பட்ட வம்பு வழக்கு மத்தியஸ்தர்கள் முன்னிலையில் பேசி தீர்க்கப்படும். பல புதிய தொழில் முதலீட்டாளர்கள் உருவாகுவார்கள்.தொழில் தொடர்பான அனைத்து இடர்பாடுகளும் நீங்கி நிம்மதி பெறும் சாதகமான நேரம். முன்னோர்களின் பரம்பரை தொழிலை நடத்துபவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி உண்டு. தொழிலை விரிவு படுத்த தேவையான நிதி உதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். எதாவது ஒருவகையில் வெளிநாட்டு பணம் புரளும்.வராக் கடன் என்று முடிவு செய்த பணம் கூட அக்கவுண்டில் வந்து விழும்.
பணவரவு அதிகரிக்கும். மந்தத்ததன்மையுடன் இருந்தவர்கள் சுறுசுறுப்பாக சுயமாக சிந்தித்து செயல்படுவார்கள். மன நிம்மதி மற்றும் தைரியம் அதிகரிக்கும். உடல் பொலிவு பெறும். ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். நட்பு வட்டாரங்கள் அதிகரிக்கும். வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். ஆழ்ந்த சிந்தனைகளால் பிரபஞ்சத்தின் அதிர்வலைகளால் நாளை நடக்கப் போவதை இன்றே உணரும் உள்ளுணர்வு உருவாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக முயன்றவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும்.
அரசியல் அல்லது தலைமைப் பதவிகளில் இருப்பவர்களுக்கு மக்களிடையே நல்ல செல்வாக்கையும் சமுதாய அந்தஸ்தையும் ஏற்படுத்த கடினமாக உழைக்க வேண்டும். இதுவரை மனசாட்சிக்கு புறம்பாக செய்த தவறான செயல்களை தவிர்ப்பது நல்லது. நிர்வகித்து வரும் பதவியை சட்டத்திட்டங்களுக்கு கட்டுபட்டு முறையாக வழிநடத்த வேண்டும். ஏற்கனவே பதவியில் இருப்பவர்கள் பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்த அதிக முயற்சி செய்ய வேண்டும். இக்கட்டான சூழ்நிலையில் சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப காயை நகர்த்த வேண்டும். எனவே நல்லவர் என்ற பெயரைத் தக்க வைப்பது உங்கள் கையில்தான் உள்ளது.
சிவாலயத்தில் மூல ஸ்தானத்தில் எரியும் விளக்கிற்கு எண்ணெய் கொண்டு சேர்க்கவும். திருஷ்டி தோஷம் , ஆரோக்கிய கேடு, புகழுக்கு கேடு, மரியாதைக் குறைவு மிகுதியாக உள்ளவர்கள் இந்த காலத்தில் தினமும் விநாயகர் அகவல் கேட்க வேண்டும் அல்லது படிக்க நல்ல மாற்றம் தெரியும். சனியின் வக்கிர பாதிப்புகள் குறைய வெள்ளிக்கிழமை வெள்ளை மொச்சை தானம் வழங்கவும்.