வசீகரமான தோற்றம் கொண்ட ரிஷப ராசியினரே! திருக்கணித பஞ்சாங்கப்படி 5.12.2026 அன்று முதல் முயற்சி ஸ்தானத்திற்குள் கேது பகவானும் பாக்கிய ஸ்தானத்திற்குள் ராகு பகவானும் நுழைகிறார்கள். இந்த ஒன்றரை ஆண்டில் சனிபகவான் மீனம் மற்றும் மேஷ ராசியில் சஞ்சரிப்பார்.குருபகவான் கடகம், சிம்மம் , கன்னி ஆகிய ராசிகளில் பயணிப்பார்.
லட்சியமும், எண்ணங்களும் நிறைவேறும். மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவிதமான பாக்கிய பலன்களும் உண்டு. வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்பை விரும்பியவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் ஆரம்பமாகிவிட்டது. உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி படிக்க முயற்சிப்பவர்களுக்கு நல் வாய்ப்பு உண்டாகும். உங்களுக்கு பேரன், பேத்தி யோகம் கிடைக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்வுகள் நடக்கும். வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரின் நட்பு மற்றும் உதவிகள் கிடைக்கும். சிலருக்கு மதம் மாறும் எண்ணம் அதிகரிக்கும். சிலருக்குஆன்மீக நாட்டம் குறையும். சிலர் கடவுள் என் சட்டைப்பையில் என புது ஆன்மீகவாதியாக உருவெடுப்பார்கள். சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதியான கை, கால் வலி, சுகர், பிரஷர் போன்றவைகள் தலை தூக்கும். தேவையற்ற வம்பு வழக்கை தவிர்க்க வேண்டும்.
ரிஷப ராசிக்கு 7,12ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு பகவான் பயணிக்கும் காலம் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாழ்க்கைத் துணையின் நல்ல அறிவுரைகள் பிடிக்காது. வாழ்க்கை துணைக்கு உங்களை நினைத்து கவலைப் பட்டே மனரீதியான, உடல் ரீதியான உபாதைகள் மிகும்.தம்பதிகளுக்குள் இணக்கமற்ற சூழ்நிலை நிலவும். தம்பதியருக்குள் மிகச் சாதரணமான விஷயத்திற்கு கூட மனக் கசப்பும் சங்கடமும் அதிகரிக்கும். ஜனன கால தசை புத்தி சாதமற்றதாக இருந்தால் தம்பதிகள் பிரிந்தும் வாழ நேரும்.இந்த காலகட்டத்தில் தம்பதிகள் வீண் விவாதத்தை தவிர்த்தால் பிரிவினையை தவிர்க்கலாம்.தொழில் கூட்டாளிகளால் உடன் வேலை பார்ப்பவர்களை பகைக்க கூடாது. இது வரை வரன் தேடி அலைந்து அலைந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும்.
ரிஷப ராசிக்கு மூன்றாம் அதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் இடப்பெயற்சி பற்றிய எண்ணம் மேலோங்கும். உங்கள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை டைரியில் எழுதி வைக்க ஆரம்பிப்பீர்கள்.பால்ய வயது எண்ணங்களை அசை போடுவீர்கள்.புதிய டிவி மற்றும் செல்போன் வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கிய குறைபாடு உருவாகும். கண் , காது, மூக்கு, நாக்கு புண் , பல் பிரச்சனை என ஏதாவது ஒரு உடல் உபாதை உங்களை பாடாய் படுத்தும்.ENT பிரச்சனை சர்ஜரி வரை கொண்டு செல்லும். உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நாட்டம் மிகும். பத்திரம் சார்ந்த வில்லங்கம் பத்திரச் செலவுகள் உங்கள் மனதை வாட்டும். இளைய சகோதரத்துடன் இருந்த வில்லங்கம், வம்பு வழக்கு அதிகமாகும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை குறைவு ஏற்படும்.
ரிஷப ராசிக்கு நான்காம் அதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் வீடு , வாகனம், நிலம், ஆபரணம், அந்தஸ்து, பதவி சமுதாய அங்கீகாரம் என உங்கள் வாழ்நாள் கனவுகள் அனைத்தும் ஈடேறும்.+2 முடித்து கல்லூரி படிப்பில் அடியெடுத்து வைக்கும் இந்த காலகட்டத்தில் எந்த கல்லூரியில் சேர்வது என்ன படிப்பு தேர்வு செய்வது போன்ற மன சஞ்சலம் மிகும். ஜனன கால ஜாதகத்தின் படி ராகு/கேது தசை நடக்கும் சில குழந்தைகளுக்கு படிப்பில் நாட்டம் குன்றும் , ஆரோக்கிய குறைபாடு மற்றும் ஞாபக மறதி குறையும் வாய்ப்பு இருப்பதால் சத்தான உணவுகளை சாப்பிடவும். .முக்கிய பதவியில் இருப்பவர்கள் பதவியை தக்க வைக்க கடுமையாக போராட நேரும். மிகவும் எச்சரிக்கையாக நிதானமாக பயபக்தியுடன் காலத்தை கடத்த வேண்டும்.
மூன்றாமிடம் என்பது உப ஜெய ஸ்தானம் . வெற்றி , புகழ் இளைய சகோதரம், வீரம், மனபலம், தைரியம், வீரிய ஸ்தானம் போன்றவற்றைப்பற்றி கூறும் இடம். வெற்றியும் புகழும் உள்ளவரை மட்டுமே மனிதனுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். வெற்றி கை நழுவும் போது புகழும் மரியாைதையும் குறையும்.மனபலம்,தைரியம் குறையும் . ஞாபக சக்தி குறைவு அதிகரிக்கும். ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். எழுதிய உயிலை,ஆவணங்களை வைத்த இடம் மறந்து போகும். செவித்திறன் குறையும். 8க்கு 8ம் இடமான மூன்றிற்கு கேது வரும் போது சுப பலன் மட்டுப்படும். நிதானமற்ற ஆசைகள் உருவாகும் எனவே சித்தித்து நிதனமாக செயல்பட வேண்டும். எனினும் கேது பயணம் செய்யும் நட்சத்திரங்களான ஆயில்யம் பூசம் கேட்டை மூலம் ஓரளவு சுப பலன்கள் கிடைக்கும் என்பதால் அச்சம் தேவையில்லை.
ரிஷப ராசிக்கு 2,5ம் அதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் பங்குச் சந்தையில் திடீர் பணவரவும் எதிர்பாராத நஷ்டங்களும் உண்டு என்பதால் முறையான திட்டமிடல் அவசியம். ஆத்ம ஞானத்தை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். இது வரை உங்களின் ஆத்மார்த்த உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய எதிர் பாலின நட்பு கிடைக்கும்.ஆலயத் திருப்பணிகள் செய்யும் பாக்கியம் கிடைக்கும். கூப்பிட்ட குரலுக்கு உங்களின் குல தெய்வம் ஓடி வரும்.தொழில், வேலை நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்கள் ஓய்வு காலத்தில் சொந்த ஊருக்கு சென்று செட்டில் ஆகுவீர்கள். குழந்தை பாக்கியமின்மையால் விரக்தியடைந்து மனம் நொந்தவர்களுக்கு உங்களின் குல தெய்வமே குழந்தையாக பிறக்கும்.பல வருடங்களாக இழுத்தடித்த பூர்வீகம் தொடர்பான சொத்துப் பிரச்சனைகள் , நீதிமன்ற வம்பு, வழக்குகளிலிருந்து சாதகமான தீர்ப்பு வரும். அங்காளி, பங்காளி உறவில் நல்லிணக்கம் ஏற்படும்.
ரிஷப ராசிக்கு 9,10ம் அதிபதியான சனியின் பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் ஜனன கால ஜாதகத்தில் ஒன்பதாமிடம் பலம் பெற்றவர்களுக்கு ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்றும் பித்ரு கடனை முறைப்படுத்தியும் பாக்கிய பலனை அதிகரிப்பார்கள். குரு உபதேசம் கிடைக்கும். ஆன்மீகப் பெரியோர் களின் நட்பும் நல்லாசியும் கிடைக்கும். பூர்வீக சொத்துகள் தொடர்பான சர்ச்சைகள் நீங்கும். தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களின் நல்லாசிகள் கிட்டும். ஜனன கால ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் பலம் இழந்தவர்களுக்கு தவறான எண்ண அலை கள் மிகுதியாகும்.தர்மத்திற்கு புறம்பான செயல்களில் மனம் ஈடுபடும். இறையுடன் மனம் ஒன்றாது. சாமியை கும்பிட்டு பெரிதாக என்ன சாதித்தோம், சாமியே கிடையாது என்ற விரக்தி ஏற்படும்.ஒரு சிலர் மதம் மாறு வார்கள். தந்தையின் மேல் எவ்வளவு அன்பை பொழிந்தாலும் அவர் உங்களை குற்றம் குறை கூறி வருவார்.தந்தை வாசிக்கும் குற்றப்பத் திரிக்கையால் மன பாரம் அதிகமாகும். சிலர் பூர்வீகத்தைவிட்டு வெளி யேறி வெளியூர், வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு சென்று விடுவார்கள்.
ரிஷப ராசிக்கு 8,11ம் அதிபதியான குருவின் புனர்பூசம் நட்சத்திரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம்விபரீத ராஜ யோகம் ஏற்பட்டு இருக்கிறது. வேற்று மதத்தினரின் நட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கிடைக்கும். நல்ல தொழிலாளிகள் கிடைக்கப் பெற்று அதன் மூலமும் அதிர்ஷ்ட வருமானம் கிடைக்கும்.எந்த வழியில் எவ்வளவு பணம் வருகிறது என்றே கணக்கிட முடியாது.பொன், பொருள் சேர்க்கைமிகுதியாக இருக்கும். உங்கள் அம்மா, அப்பாவின் ஆதரவை பெற்று உங்கள் மூத்த சகோதர, சகோதரிகளின் பங்ககையும் சேர்த்து வளைத்து போடுவீர்கள். ஒரு சிலர் அம்மா அப்பாவின் சம்மதம் இல்லாமல் பூர்வீகச் சொத்தை அடமானம் வைத்து அதனை தொழிலுக்கு பயன்படுத்தி அதன் மூலமும் வருமானம் பெறுவீர்கள். தார்மீகமற்ற பிரமாண்ட ஆசைக்கு ஏற்படும்.உங்களுடைய ஆசைக்கு அளவு கோலே இல்லாத நிதான மற்ற எண்ணத்தை தருவார்.
காசி, கயை சென்று அங்கே பித்ருக்களுக்கு சிரார்த்தம், தில ஹோமம் செய்ய வேண்டும்.அந்தணர்களுக்கு உணவு தானம் செய்ய வேண்டும். கன்றுடன் கூடிய பசுவைத் தானம் செய்ய வேண்டும்.