பராபவ வருடம் ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை ஏற்படுத்துகிறார். நீச்சம் பெற்ற சூரியன் சுக்ரனோடு இணைந்து "நீச்ச பங்க ராஜயோகத்தை உண்டாக்குகிறார். எனவே இம்மாதம் தொட்ட காரியங்களில் வெற்றிகிட்டும். தொழில் முன்னேற்றம் உண்டு. பணி உயர்வு எதிர்பார்த்தபடி வந்துசேரும். மேலும் ஐப்பசி 3-ந் தேதி சிம்ம ராசிக்கு வரும் குரு. அர்த்தாஷ்டம குருவாக வருகிறார். இருப்பினும் அவரது பார்வை பலத்தால் சென்ற மாதத்தில் தொழியில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வரும். உத்தியோகத்தில் இருந்து விலகி, சொந்தத் தொழில் செய்யும் முயற்சியில் இறங்குவீர்கள். பொதுநலத்தில் இருப்பவர்கள் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். மொத்தத்தில் நல்ல சம்பவங்கள் நிறைய நடைபெறும்.
மாதத் தொடக்கத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் குரு பகவான். ஐப்பசி 3-6 தேதி (20.10.2026) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். அங்கு சில மாதங்கள் சஞ்சரித்த பிறகு மீண்டும் கடக ராசிக்கு வக்ர கதியில் சஞ்சரிக்கப்போகிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. அஷ்டமத்தில் குருவின் பார்வை பதிவதால் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வழிபிறக்கும். கடந்த சில வருடங்களாக இல்லத்தில் நடைபெறாமல் இருந்த காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதால் ஆரோக்கியம் சீராகும். ஆலயத் திருப்பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
குருவின் பார்வை 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால் முன்னேற்றப் பாதையை நோக்கி தொழில் செல்லும். லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைக்கும். படிப்பிற்கேற்ற வேலை உண்டு. வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டுமென்று நினைத்தவர்களுக்கு அழைப்புகள் வரலாம். விரயங்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். வீடு மாற்றமோ, இடமாற்றமோ வருவதற்கான வாய்ப்பு உண்டு வரும் மாற்றங்கள் நல்ல மாற்றங்களாக அமையும். வீட்டிற்குத் தேவையாள விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்கும் வாய்ப்பு உண்டு. தொழிலை இடமாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு நல்ல நகவல் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான், 13.11.2026 அன்று 9-ம் இடமான பாக்கிய ஸ்தாளத்திற்கு வருகிறார். அங்கு அவர் ஒன்றரை வருட காலம் இருக்கும் போது பெற்றோரிடமும், மற்றவர்களிடமும் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும். போதுமான அளவிற்கு பொருளாதாரம் வளர்ச்சி பெறும், முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கிடுகள் கிடைக்கும் புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சம்பள சம்பள உயர் உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று வெளியூரில் பணிபுரியும் சூழல் உருவாகும்.
மூன்றாமிடம் எனப்படும் வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். முன்னோர் கட்டி வைத்த ஆலயங்களை முறையாகப் பேணிப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவீர்கள். உங்களின் முன்னேற்றத்தில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும், பிள்ளை களாலும், பிறராலும் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். பாகப்பிரிவினைக்கு இதுவரை சம்மதிக்காத உடன்பிறப்புகள் இப்பொழுது சம்மதிப்பர். உங்களுக்குரிய பங்கு கைக்கு கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வந்துசேரும். கலைஞர்களுக்கு அடுக்கடுக்காக ஒப்பந்தம் உண்டு. மாணவ -மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெய்களுக்கு திருமணத் தடை அகலும். தெய்வ தரிசனங்கள் திருப்தி தரும்.