பராபவ வருடம் ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் 4-ம் இடத்தில் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த செயலை எளிதில் முடிந்து வெற்றி காண்பீர்கள். உங்கள் ராசியிலேயே விரயாதிபதி செவ்வாய் இருப்பதால், விரயங்கள் அதிகரிக்கத்தான் செய்யும். என் நாலும் அதைச் சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது. உடன்பிறப்புகளின் வழியில் நடைபெறும் சுபகாரியத்தை முன்னின்று நடத்தும் வாய்ப்புக் கிடைக்கும்.
ஆடி 15-ந் தேதி (31.7.2006) அன்று கடக ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். அவரோடு உச்ச குருவும் இணைந்தி ருப்பதால் அதிக நன்மைகள் நடைபெறும். உங்கள் ராசிக்கு 2. 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும்போது, குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்னைகளுக்கு வேலை கிடைக்கும். அவர்கள் வெளிநாடு சென்று படிக்க வேண்டும் அல்லது பணிபுரிய வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நிறைவேறும்.
ஆடி 16-% தேதி (1.8.2026) மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய் விரயாதிபதியான அவர் தன ஸ்தானத்திற்கு வரும்போது விரயங்கள் அதிகமாகும். என்றாலும் விரயத்திற்கேற்ற பணவரவும் இருக்கும். இடம்.பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். உடன்பிறப்புகளின் திருமண முயற்சி கைகூடும். நீண்டதூரம் பயணம் பற்றிய திட்டம் நடைபெறும். இடமாற்றம், வீடு மாற்றம் பற்றிய சித்தனை நிறைவேறும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உதாசீனப்படுத்திய உறவினர்கள் ஓடி வந்து இணைவர். உங்கள் முன்னேற்றம் ஆச்சரியப்படும்படி அமையும். வியாபார முன்னேற்றம் கருதி புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்ளலாமா? என்று சிந்திப்பீர்கள்.
ஆடி 17-ந் தேதி (2.8.2026) அன்று கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிநாதனான சுக்ரன் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. அதே சமயம் சுக்ரன், உங்கள் ராசிக்கு 1-ம் இடத்திற்கும் அதிபதி என்பதால் பணியில் நிரந்தரம் ஏற்படும். உயர்மட்ட அதிகாரிகளால் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். விருப்ப ஓய்வில் வெளிவந்து சுய தொழில் தொடங்கும் நேரம் இது உடல்நிலையில் கொஞ்சம் கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் நீச்சம் பெறுவதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. முதலில் தடுமாற்றம் ஏற்பட்டாலும், இறுதியில் அது சிறப்பாக முடியும். விலை உயர்ந்த பொருட்களை விற்க நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பரிசீலனையில் இருந்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் அதிகரிக்கும். பெண்களுக்கு சுபச் செய்திகள் வந்து சேரும். சொத்துக்கள் வாங்கி மகிழும் யோகம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூலை : 17, 18, 30, ஆகஸ்டு: 31, 2, 3, 10, 11, 14, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.