எதிலும் தனித்து இயங்கும் வாரம். ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் புதன் குரு சேர்க்கை உள்ளது. செயலாற்றல் அதிகரித்து வாழ்வில் மறக்க முடியாத நல்ல மாற்றங்களை தரப்போவது நிச்சயம். செல்வாக்கு உயரும். சாதாரண நிலையில் இருப்பவர்கள் கூட உயர் நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். கற்பனை சக்தி, சாத்வீக குணம், எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும். எதிரிகள் ஒதுங்குவார்கள். நினைத்தது நிறைவேறும். பொறுமையின் மறு உருவமான நீங்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை தக்க வைக்க அதிக முயற்சியும் செய்ய வேண்டும். உயர்குலத்தவராலும் ஒரு, உறவினர்களாலும் பெரிய உதவிகள் கிடைக்கும். 11.8.2026 அன்று அதிகாலை 4.43 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொருளாதாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் என்பதால் பிறரின் மனம் நோகும் படியான வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். ஆடி அமாவாசையன்று உணவு உடை தானம் வழங்கவும்.