முன்னேற்றமான வாரம். ராசிக்கு குருவின் பார்வை பதிவதால் இருண்டு கிடந்த வாழ்க்கையில் மெதுவாக வெளிச்சம் பரவும். எதிர்பாராத நல்லவை நடக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சவாலான வேலையையும் சாமர்த்தியமாக முடிக்கும் திறமை வளரும். தொழிலில் இருந்த தடைகள் மெதுவாக விலகி மறுபடியும் துளிர்க்கும். பண நெருக்கடி குறையும். தடைபடாத பண வரவால் சுபசெலவுகள் மிகுதியாகும். வீடு கட்டும் பணி துரிதமாகும். வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். விவசாயிகளுக்குத் தடைபட்ட குத்தகை வருமானம் வந்து சேரும். குடியிருப்புகளுக்கு புதிய வாடகைதாரர் வரலாம். பெண்கள் வீட்டிற்கு தேவையான மங்கலப் பொருட்கள் வாங்குவார்கள். திருமணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். மனச்சோர்வு, உடல் சோர்வு குறையும். சிலர் தள்ளுபடியில் தீபாவளிக்கு ஆடை ஆபரணம் வாங்க வாய்ப்பு உள்ளது. 4.10.2026 அன்று மாலை 6.32 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர் பாலினத்தவருடன் எச்சரிக்கையாக இருக்கவும். மஹாளய அமாவாசை அன்று பராமரிப்பு இல்லாத அம்மன் கோவில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கவும்.