தடைபட்ட அனைத்து இன்பங்களும் துளிர் விடும் வாரம். ராசிக்கு உச்ச குருவின் பார்வை உள்ளது. தடையாக இருந்த ஒரு சில காரியங்கள் தானாக நடைபெறும். திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும். புத்திர பாக்கியம் உண்டாகும். பங்கு சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். மாணவர்களுக்கு நல்ல கல்லூரியில் இணைந்து படிக்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும். சம்பந்திகள் சண்டை முடிவிற்கு வரும். வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் நல்ல நேரம். புதிய சொத்துக்கள், உயர்ரக வாகனங்கள் சேரும். தந்தையின் மூலம் பெரும் பணம் கிடைக்கும். கடன், வட்டி தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். எதிரிகள் தொல்லை குறையும். இல்லத்தரசிகளுக்கு இது ரொம்ப நல்ல வாரம். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.