விருச்சகம் - வார பலன்கள்

விருச்சிகம்- 2026 வார ராசிபலன் 25.10.2026 முதல் 31.10.2026 வரை

சிலருக்கு விருப்ப திருமணம் நடக்கலாம்.

விருச்சிகம்

விருப்பங்கள் நிறைவேறும் வாரம். வார இறுதியில் 2,5ம் அதிபதி குரு அதிசாரமாக தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகிறார்.எளிதில் ஆதாயம் அடைய முடியும்.தொழில் மூலம் நல்ல பொருளாதார வளர்ச்சி ஏற்படும். திறமையால் தொழில் உத்தியோகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். அரசு வேலை எதிர் பார்த்தவர்களுக்கு இந்த வாரம் நல்ல தகவல் கிடைக்கும். நீதி மன்ற வழக்குகளில் இருந்து எதிர்பாராத ஒரு இனிய செய்தி கிட்டும். வயோதிகர்கள் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் மன மகிழ்ச்சியை அதிகரிப்பார்கள். தந்தையின் சொத்து தொடர்பான சர்ச்சையில் உங்கள் மூத்த சகோதரரின் கை ஒங்கும். பெற்றோர்களின் ஆதரவு சகோதரருக்கு இருப்பது சற்று மன சஞ்சலத்தை ஏற்படுத்தலாம். வாழ்க்கைத் துணை மூலம் எதிர்பாராத யோகமும் அதிர்ஷ்டமும் உண்டாகும். சிலருக்கு விருப்ப திருமணம் நடக்கலாம். 29.10.2026 அன்று இரவு 10.06க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் ஆரோக்கிய தொல்லைகள் அதிகரிக்கும். தேவையற்ற விவாதத்திலிருந்து சற்று விலகிச் செல்லவும். பௌர்ணமி அன்று அன்னாபிஷேகத்தில் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கவும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT