விருச்சகம் - வார பலன்கள்

விருச்சிகம்- வார ராசிபலன் 24.5.2026 முதல் 30.5.2026 வரை

உங்களது திட்டங்கள் செயல்பாடுகள், எண்ணங்கள் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்

நினைத்ததை நிறைவேற்றக்கூடிய காலம்.ராசிக்கு சூரியன் மற்றும் புதனின் பார்வை உள்ளது. இது விருச்சக ராசிக்கு விரும்பிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய கோட்ச்சார அமைப்பாகும்.

குரு பகவான் உச்சம்

மேலும் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் உச்சம் பெறுவது விருச்சிக ராசிக்கு இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டு தரக்கூடிய அமைப்பாகும். ராசி பூர்வ புண்ணிய ஸ்தானம் பாக்கிய ஸ்தானம் பலம் பெறுவதால் தொட்டது துலங்கும். பாக்கிய பலன்கள் மிகுதியாகும். உங்களது திட்டங்கள் செயல்பாடுகள், எண்ணங்கள் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டு.

உடல் ஆரோக்கியம்

தொழிலில் லாபமும், ஏற்றமும் உறுதி. பங்கு சந்தையில் ஆர்வம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புத்திர பிராப்தம் கிடைக்கும்.உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வைகாசி விசாகத்தன்று இளநீர் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT