சாதகமான வாரம். ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் குரு செவ்வாய் சேர்க்கை உள்ளது. புகழ், அந்தஸ்து, சகல சௌபாக்கியங்கள், கெளரவத்துடன் வாழ்வீர்கள். பலர் தொழில் உத்தியோகத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். நாவில் குல தெய்வம் நின்று பேசும். வாக்கு பலிதம் உண்டாகும். மெக்கானிக் மற்றும் இயந்திரப் பணியாளர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு. பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். ஒரு சிலர் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்து சம்பாதிப்பார்கள். பூர்வீகச் சொத்தை விற்று புதியவீடு வாங்குவீர்கள். மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி யோகம் கை கூடி வரும். வரவிற்கு ஏற்ற செலவும் இருக்கும். அனாவசிய வைத்தியச் செலவு இருக்காது. புத்திர பாக்கிய தடை விலகும். திருமணத்திற்கு நல்ல வரன் தேடி வரும். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். சிலரின் வெளிநாட்டு வேலை முயற்சியில் வெற்றி கிடைக்கும். தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது நன்மை தரும்.