விருச்சிகம்- வார ராசிபலன் 
விருச்சகம் - வார பலன்கள்

விருச்சிகம்- வார ராசிபலன் 14.6.2026 முதல் 20.6.2026 வரை

குடும்ப உறவுகளிடம் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

விருச்சிகம்

பாக்கிய பலன்கள் மிகுதியாகும் வாரம். ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி செவ்வாயின் எட்டாம் பார்வையும் உச்ச குருவின் ஐந்தாம் பார்வையும் ராசிக்கு உள்ளது. இது விபரீத ராஜயோக அமைப்பாகும். சிலருக்கு மனைவி மூலம் அதிர்ஷ்ட பணம், சொத்து கிடைக்கும் அல்லது வட்டி வருமானம், பினாமி சொத்து யோகம், அரசியல் யோகம் உண்டு. வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீடு கட்டி குடியேறலாம். சிலர் வாகனத்தை மாற்றலாம்.குடும்ப உறவுகளிடம் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடம் பழைய கதை பேசி வம்பை வளர்க்காமல் இருந்தால் மன நிம்மதி நிலைக்கும்.

திருமண தடை அகலும். குழந்தை பேறு உண்டாகும்.தொழில் மற்றும் உத்தியோகத்தில் நிலவிய ஏற்ற இறக்கங்கள் சமன்படும். ஆன்லைன் வர்த்தகர்களின் வாழ்வாதாரம் உயரும்.15.6.2026 அன்று காலை 8.41 முதல் 17.6.2026 அன்று காலை 8.13 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் உத்தியோகம் சம்பந்தமான பய உணர்வு அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்கள், வாக்குவாதங்களை குறைத்தாலே பெரிய பிரச்சனை எதுவும் வராது என்பதை உறுதியாக கூறலாம். செவ்வாய்க்கிழமை பருப்பு சாதம் தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406