விருச்சகம் - வார பலன்கள்

விருச்சிகம்- 2026 வார ராசிபலன் 1.11.2026 முதல் 7.11.2026 வரை

புதிய வேலைக்கான முயற்சியில் சில தடங்கல் ஏற்படலாம்.

விருச்சிகம்

சுமாரான வாரம். ராசி அதிபதி செவ்வாய் நீச்சமாக உள்ளார். 2,5ம் அதிபதி குரு பத்தாம் இடத்தில் கேது உடன் அதிசாரமாக உள்ளார். மறைமுக எதிர்ப்புகள், பணப்பற்றாக்குறை பற்றிய கவலைகள் வந்து செல்லும். புதிய வேலைக்கான முயற்சியில் சில தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் சில நேரங்களில் குடும்ப உறவுக்காக சூழ்நிலை கைதியாக வாழ நேரிடும். சிலருக்கு தத்து புத்திர யோகம் உண்டாகும். சிலர் வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய நிலை உருவாகும். திட்டமிட்ட திருமணங்கள் சிலருக்கு தள்ளிப் போகலாம். ஆனாலும் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம். புதிய எதிரிகள் உருவாகுவார்கள். நம்பியவர்களே முதுகில் குத்தும் நேரம் என்பதால் சிந்தித்து செயல்பட வேண்டும். அஜீரணக்கோளாறு ஏற்படும் என்பதால் உணவு விசயத்தில் கவனம் தேவை. காவல்துறை, ராணுவத்தில் பணிபுரிபவர்களின் தனித்திறமைக்கு தகுந்த பாராட்டுகள் கிடைக்கும். அரசு மருத்துவமனையில் பணிபுரிபவர்களுக்கு இனிப்பு தானம் வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT