விருச்சகம் - வார பலன்கள்

விருச்சிகம்- வார ராசிபலன் 06.09.2026 முதல் 12.09.2026 வரை

அஷ்டமகுரு காலத்தில் விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள்.

விருச்சிகம்

குடும்பத்தில் நிம்மதி பிறக்கும் வாரம். ராசிக்கு உச்ச குருவின் பார்வை உள்ளது. புதிய தெளிவு பிறக்கும். அறிவாற்றல் மேம்படும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். அஷ்டமகுரு காலத்தில் விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். புதிய தொழில் எண்ணங்கள் உருவாகும். அதை செயல்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் கூடி வரும். சில நேரங்களில் விரய செலவுகள் இருந்தாலும் அதை சமாளிக்க கூடிய அளவில் வருவாயும் இருக்கும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடக்கும். புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். இடப்பெயர்ச்சி வீடு மாற்றம் நாடு மாற்றம் ஊர் மாற்றம் வேலை மாற்றம் வரலாம். சொந்த வீடு, வாகனம், அழகு ஆடம்பரப் பொருட்கள் என வாழ்க்கை இன்பமயமாக மாறும். எதிர்பார்த்த வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். 7.9.2026 அன்று பகல் 12.38 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. மாணவர்கள் சிந்தனையை ஒரு நிலைப்படுத்த வளமான எதிர்காலம் உண்டு. விருச்சக ராசியினர் திருச்செந்தூர் முருகனை வழிபட நிலையான முன்னேற்றங்கள் உண்டாகும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT