விருச்சிகம் 
விருச்சகம் - வார பலன்கள்

விருச்சிகம்- 2026 வார ராசிபலன் 29.11.2026 முதல் 5.12.2026 வரை

இடப் பெயர்ச்சியால் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும்.

விருச்சிகம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் 2,5ம் அதிபதி குருவுடன் இணைந்து பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைவீர்கள். ஒரு சிலருக்கு தகுதிக்கு மீறிய வேலை கிடைக்கும். தடைப்பட்ட சம்பள பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். மாமியாரின் பாராட்டு மகிழ்ச்சியை அதிகரிக்கும். மகன், மகளுக்கு விரும்பிய விதத்தில் வரன் அமையும். எதிரிகள் தொல்லை நீங்கும். நம்பிக்கையும், பலமும், தைரியமும் அதிகரிக்கும். இடப் பெயர்ச்சியால் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். பெண் குழந்தைகளுக்கு காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுப மங்கள நிகழ்வுகள் நடைபெறும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT