விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்

விருச்சிகம்- 2026 ஐப்பசி மாத ராசிபலன்

சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும்.

விருச்சிக ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் கடக ராசியில் நீச்சம் பெற்று, அங்கு உச்சம் பெற்ற குருவோடு சேர்ந்து நீச்ச பங்க ராஜயோகத்தை உருவாககுகிறார். எனவே தொட்டது துலங்கும். தொடக்கத்தில் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. குரு பார்க்க கோடி நன்மை என்பதால் மாதத் தொடக்கத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் படியான செயல்கள் நடைபெறும். 10-ம் இடத்தில் குரு வந்ததும் இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையும். ராகு-கேதுக் களின் பெயர்ச்சி காலம், ஒரு அற்புதமான காலமாக அமையப்போகிறது.

சிம்ம - குருவின் ஆதிக்கம்

மாதத் தொடக்கத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கும் குரு பகவான், ஐப்பசி 3-ந் தேதி (30.10.2026) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். அங்கு சில மாதங்கள் சஞ்சரித்த பிறகு மீண்டும் ராசிக்கு வக்ர கதியில் சஞ்சரிக்கப்போகிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிகின்றது. குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பொருளாதா ரத்தில் நிறைவு ஏற்படும். குடும்ப முன்னேற்றம் கூடும். உடன்பிறப்புகள் பக்கபலமாக இருப்பர். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். பிரப லஸ்தர்களின் பெயர் பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பெறும்விதம் நல்ல சம்பவங்கள் பலவும் நடைபெறும்.

குருவின் பார்வை 4. 6 ஆகிய இடங்களில் பதிவதால் அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். தெய்வீக நாட்டம் அதிகரிக்கும். கடன் சுமை குறைய வழிபிறக்கும். எதிரிகள் உதிரிகள் ஆவர். நீங்கள் தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் உங்கள் குரலுக்கு மேலதிகாரிகள் செவிசாய்த்து உயர் பதவிகளை வழங்குவர். நாலாபுறமும் இருந்து நல்ல தகவல் கிடைக்கும் நேரம் இது.

ராகு-கேது பெயர்ச்சி

உங்கள் ராசிக்கு இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான். 13.11.2026 அன்று 3-ம் இடம் எனப்படும் வெற்றிகள் ஸ்தானத்திற்கு வருகிறார். அங்கு ஒன்றரை ஆண்டுகள் தங்கி இருந்து வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வர வழிவகுத்துக்கொடுப்பார். அர்த்தாஷ்டம ராகு விலகிவிட்டது என்பதால் இளி நற்பலன்கள் வந்துசேரும். ஆரோக்கியம் சீராகும். நாமதித்து வந்த பல காரியங்கள் இனி தடையின்றி நடைபெறும். சேமிப்பு அதிகரிக்கும். செல்வநிலை உயரும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு தலைமைப் பதவி தானாக வரலாம்.

9-ல் சஞ்சரிக்கும் கேதுவால் ஒளிமயமான எதிர்காலம் அமையும். பொன், பொருள் சேரும். புகழ் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்துசேரும். நாட்டுப்பற்றுமிக்கவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு உறுதுணையாக விளங்குவர். பூர்வீக சொத்துப் பிரச்சினை அகலும், புகழ்மிக்கவர்களின் பட்டியலில் உங்கள் பெயரும் இடம்பெறும். நாகரிகப் பொருட்களை வாங்குவதில் நாட்டம் செலுத்துவீர்கள். அனணன் தம்பிகளுக்குள் இருக்கும் அரசல் புரசல்கள் அகலும். புதிய வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு.

வியாபாரம்

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வஊதிய உயர்வு மகிழ்ச்சி தரும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் அதிகரிக்கும். பெண்களுக்கு பொருளாதார நிலை உயரும். விவாகப் பேச்சுக்கள் முடிவாகும்.

SCROLL FOR NEXT