விருச்சிகம் 
விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்

விருச்சிகம்- 2026 ஆடி மாத ராசிபலன்

கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும் அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதந் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதன் பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தனவரவு திருப்தி தரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் கல்யாணக் கனவு நனவாகும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள்.

கடக-புதன்

ஆடி 15-% தேதி (31.7.2026) அன்று கடக ராசிக்கு புதன் செல்கிறார். அவர் அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். அவரோடு உச்ச குருவும் இணைவதால் அற்புதமான நேரம் இது. நீங்கள் தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும் வெற்றி வந்துசேரும். 'இடம், பூமி வாங்க வேண்டும், கட்டிடம் கட்டிக் குடியேற வேண்டும்' என்ற எண்னாம் நிறைவேற வழிபிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். துணிவும், பணிவும் மிக்க உங்களுக்கு தொழில் ரீதியாக எடுத்த புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சகோதர ஒற்றுமை பலப்படும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும் அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும்.

மிதுன- செவ்வாய்

ஆடி 16-ந் தேதி (1.8.2026) அன்று மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கும், 6-ம் இடத்திற்கும் அதிபதியானவர். செவ்வாய். 6-க்கு அதிபதியான அவர், 8-ம் இடத்திற்கு வருவதால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும். 'விபரீத ராஜயோக' அடிப்படையில் எதிர்பாராத மாற்றங்கள் வந்துசேரும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். ஆரோக்கியத் தொல்லைகளை சமாளித்து விடுவீர்கள். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் திருமணங்களை முன்னின்று நடத்துவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமையைக் கண்டு பாராட்டுவர். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் கூடுதல் நன்மைகள் உண்டு.

கன்னி- சுக்ரன்

ஆடி 17-நீ தேதி (2.8.2026) அன்று கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் நீச்சம் பெறுவது நன்மை நான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளிநாட்டு முயற்சி கைகூடும். புதிய வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு வேலை சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு தேர்வில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு உங்கள் பெயரிலேயே அசையாச் சொத்து வாங்கும் யோகம் உண்டு. கல்யாண முயற்சிகள் கைகூடும்

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜூலை: 19, 20, 27, 28, 29, ஆகஸ்டு: 1, 2, 12, 13, 16, 17.

மகிழ்ச்சி தரும் வண்ணம் வையட்