தனுசு- வார ராசிபலன் 
தனுசு - வார பலன்கள்

தனுசு- வார ராசிபலன் 7.6.2026 முதல் 13.6.2026 வரை

குடியிருக்கும் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும்.

தனுசு

விபரீத ராஜயோகமான வாரம். ராசி அதிபதி குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் அடைகிறார். சுமார் ஐந்து மாத காலத்திற்கு பிறகு குரு அதிசாரமாக 9மிடத்திற்கு செல்கிறார். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். தைரியம், சுறுசுறுப்பு அதிகரிக்கும். தவறாக புரிந்த உறவினர்கள் பகைமை மறப்பார்கள்.

பாகப்பிரிவினைக்கு உடன் பிறப்புகள் சம்மதிப்பார்கள். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடத்தி மகிழ்வீர்கள். குல தெய்வ கடாட்சம், முன்னோர்களின் நல்லாசி கிட்டும். திருமணத் தடை அகலும். திருமணமான இளம்பெண்கள் கருத்தரிப்பார்கள்.

ஆரோக்கிய தொல்லை குறையும். வழக்குகள் வெற்றியடையும். பெரிய முதலீடு போன்ற புதிய முயற்சிகளை தவிர்த்து அன்றாட பணியில் மட்டும் ஈடுபடவும். குடியிருக்கும் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள். வீடு, நிலம் போன்றவை வாங்கும் யோகம் ஏற்படும். சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்டமான சொத்து நகை, பணம் கிடைக்கலாம். சில ஆரோக்கிய குறைபாடுகள் அறுவை சிகிச்சையில் சீராகும். பிரதோஷ நாளன்று சந்தன அபிஷேகம் செய்து சிவனை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி,

செல்: 98652 20406

SCROLL FOR NEXT