தனுசு - வார பலன்கள்

தனுசு - வார ராசிப்பலன் 31.5.2026 முதல் 6.6.2026 வரை

உடல் நலம் காக்க வேண்டும்.

நன்மையும், தீமையுமற்ற வாரம். ராசிக்கு புதன் சுக்கிரன் மற்றும் சனியின் பார்வை உள்ளது. இது அஷ்டம குருவின் காலம் என்பதையும் மறக்கக்கூடாது. மன தடுமாற்றம் அதிகரிக்கும். இது வரையில் உண்டான வெற்றிகள் எல்லாம் தடைபட்டது போன்ற உணர்வு மேம்படும். எனவே தேவையற்ற பேச்சைத் தவிர்க்கவும். தம்பதிகளிடம் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றக் கூடும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பத்திரப் பதிவு தாமத மாகும். ஒரே நேரத்தில் முக்கியமான பல செயல்களை கவனிக்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற குழப்பம் இருக்கும்.

முன் கோபத்தைக் குறைத்துப் பொறுமையோடு செயல்பட வேண்டும். உடல் நலம் காக்க வேண்டும். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்று வாங்கலாம். வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். காதல் காலை வாரும். தேவையற்ற வழக்குகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.தேவையற்ற அலைச்சல் மிகுந்த பயணங்களைத் தவிர்க்கவும். தினமும் நவகிரகங்களை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

SCROLL FOR NEXT