தனுசு - வார பலன்கள்

தனுசு- 2026 வார ராசிபலன் 8.11.2026 முதல் 14.11.2026 வரை

உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஏற்படும்.

தனுசு

விருப்பங்கள் நிறைவேறும் வாரம். ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கிறார். முன்னோர்களின் நல்லாசியும், குல தெய்வ அருளும் கிடைக்கும். குடும்ப உறவுகளின் சந்திப்பு பால்ய வயது இன்பங்களை மலரச் செய்யும் தன வரவில் தன்னிறைவு உண்டாகும். வேலை யாட்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். குடும்ப நலனுக்காக ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வர திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஏற்படும். தடைபட்ட வேலை கிடைக்கும். கடனுக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்த நிலை மாறும். கடன் தர நிதி நிறுவனங்கள் வங்கிகள் தேடி வரும் காலம். அடமான நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள். அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். கைமறதியாக வைத்த நகைகள், முக்கிய ஆவணங்கள் தென்படும். சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படும். திருமணமா கதவர்களுக்கு திருமணம் கூடி வரும். புத்திர பிராப்தம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். சஷ்டி விரதம் இருந்து விபூதி அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT