தனுசு வார ராசிபலன் 
தனுசு - வார பலன்கள்

தனுசு- 2026 வார ராசிபலன் 5.7.2026 முதல் 11.7.2026 வரை

சிலர் உடன் பிறப்புகளுக்காக சொத்தை விட்டுக் கொடுப்பார்கள்.

தனுசு

புதிய முயற்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலம். தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு ராசி அதிபதி குருவின் பார்வை இருப்பதால் தொழில் மந்த நிலை மாறி சூடு பிடிக்கும். எதிர்பாராத புதிய திருப்பங்கள் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பங்குச் சந்தை, அதிர்ஷ்டப் பணம் என உபரி வருமானம் கிடைக்கும்.பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும். கடன் சுமை குறையும். பேச்சில் தெளிவு இருக்கும்.தொழில், உத்தியோகத்தில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காதல் திருமண முயற்சி வெற்றி தரும். சிலருக்கு வாழ்க்கைத் துணையால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். ஆன்மீக நாட்டம் மத நம்பிக்கை அதிகரிக்கும்.மனைவி, மக்கள், பேரன், பேத்திகள், சொத்து சுகம் என அனைத்து பாக்கிய பலன்களையும் அடைவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சிலர் உடன் பிறப்புகளுக்காக சொத்தை விட்டுக் கொடுப்பார்கள்.சுய விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். எதிர் பாலினத்தவரிடம் கவனமாகபழகவும். அலைச்சல் மிகுந்த பயணங்கள் இருக்கும். இனம் புரியாத நோயின் தன்மை தாக்கம் சிகிச்சையில் சீராகும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT