தனுசு - வார பலன்கள்

தனுசு- 2026 வார ராசிபலன் 4.10.2026 முதல் 10.10.2026 வரை

பெற்றோர்கள் பிரச்சனையை பிள்ளைகள் முன் விவாதிப்பதை தவிர்க்கவும்.

தனுசு

விரும்பிய மாற்றங்கள் தேடிவரும் வாரம். தன ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் சொத்து, வாகன வசதி மேம்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் தேடிவரும். மனதில் நம்பிக்கையும் உறுதியும் அதிகரிக்கும். கூட்டாளிகளுடன் இணைந்து புதிய தொழில் கிளைகள் துவங்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். அரசாங்க பணிகள் விரைந்து முடியும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு கணவர் விலை உயர்ந்த அன்பளிப்பு வழங்குவார். பெற்றோர்கள் பிரச்சனையை பிள்ளைகள் முன் விவாதிப்பதை தவிர்க்கவும். தவணை முறைத் திட்டத்தில் வீட்டு மனை அல்லது தோட்டம் வாங்குவீர்கள். 4.10.2026 அன்று மாலை 6.32 முதல் 6.10.2026 இரவு 10.17 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் இயல்பான பணியில் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் பெரிய இழப்புகள் ஏற்படாது. சிலருக்கு ஞாப சக்தி குறையும். தேவையற்ற, அலைச்சல். பயணங்கள் அதிகரிக்கும். மஹாளய அமாவாசை அன்று பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகளை பெறவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT