தனுசு - வார பலன்கள்

தனுசு- 2026 வார ராசிபலன் 27.9.2026 முதல் 3.10.2026 வரை

ஏற்றுமதி, இறக்குமதி வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.

தனுசு

புதிய முயற்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய வாரம். ராசிக்கு சனியின் பார்வை உள்ளது. தொழில் மந்த நிலை மாறி சூடு பிடிக்கும். எதிர்பாராத புதிய திருப்பங்கள் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பங்குச் சந்தை, அதிர்ஷ்டப் பணம் என உபரி வருமானம் கிடைக்கும். பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும். கடன் சுமை குறையும். காதல் திருமண முயற்சி வெற்றி தரும். சிலருக்கு வாழ்க்கைத் துணையால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சிலர் உடன் பிறப்புகளுக்காக சொத்தை விட்டுக் கொடுப்பார்கள். சுய விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். எதிர் பாலினத்தவரிடம் கவனமாக பழகவும். அலைச்சல் மிகுந்த பயணங்கள் இருக்கும். இனம் புரியாத நோயின் தாக்கம் சிகிச்சையில் சீராகும். திருமண வாய்ப்பு உடனே தேடி வரும் குழந்தை பாக்கியம் உண்டாகும். மகாளய பட்ச காலத்தில் பெற்றோர்கள் பெரியோர்களின் நல்லாசிகளை பெறவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT