தனுசு 
தனுசு - வார பலன்கள்

தனுசு- 2026 வார ராசிபலன் 15.11.2026 முதல் 21.11.2026 வரை

தொழில் மற்றும் உத்தியோக விசயமாக குடும்பத்தை பிரிந்து செல்ல நேரும்.

தனுசு

நிம்மதியான வாரம். ராசி அதிபதி குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாயுடன் இணைந்து ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது குரு மங்கள யோகமாகும்.மனிதன் பிறக்கும் போது பிரச்சினையும் உடன் பிறந்தது என்பதால் கடவுள் நம்பிக்கையுடன் சந்தோசமாக வாழ விரும்புவீர்கள். தொழில் மற்றும் உத்தியோக விசயமாக குடும்பத்தை பிரிந்து செல்ல நேரும். வேற்று மத, இன அல்லது மொழி பேசுபவர்க ளின் நட்பு கிடைக்கும். அந்திய மொழியை கற்பதில் ஆர்வம் அதிக மாகும். மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். நிறைய பணம் வரும். ஆனால் கையில் பணம் தங்காது. குடும்ப உறுப்பினர்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்களின் எதிர்பாராத பொருளாதார தேவையை நிறைவு செய்ய அதிக பண உதவி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அடிக்கடி மின்சா தனங்கள் பழுதாகி வீண் விரயங்கள் உண்டாகும். பொது நலச் சேவையில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப விஷயத்தை பொது இடங்களில் பேசாமல் இருந்தால் பெரிய பாதிப்புகள் வராது ஆஞ்சநேயரை வழிபட தீவினைகள் அண்டாது.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT