ஏற்ற இறக்கம் நிறைந்த வாரம். ராசிக்கு சூரியன், புதன், சனியின் பார்வை உள்ளது. கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ATM கார்டுகளை கவனமாக கையாள வேண்டும். பொருளாதார விஷயத்தில் கவனம் செலுத்தி விரயத்தை சேமிப்பாகவோ, சுப விரயமாகவோ மாற்ற முறையான திட்டமிடல் தேவை. குடும்பத்தில் சங்கடங்களை தவிர்க்க பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. உணவுக் கட்டுப்பாடு அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். சிலருக்கு விபத்து கண்டம், சர்ஜரி அவமானம் போன்ற பாதிப்புகள் இருக்கும்.
வேலை மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. ஒரு கடனை அடைக்க, மறுகடன் வாங்குவது அல்லது பழைய கடனை அடைக்க, புது கடன் வாங்குவது என்று கடனுக்கு மேல் கடன் கூடிக்கொண்டு போகும். சிலருக்கு விருப்ப விவாகம் நடக்கும். 17.6.2026 அன்று காலை 8.13 முதல் 19.6.2026 அன்று காலை 10.7 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். எந்த செயலையும் திட்டமிட்டு செய்தால் பெரிய பாதிப்பு இல்லாமல் தப்பிக்க முடியும். வியாழக்கிழமை சுண்டல் தானம் வழங்கவும்.