தனுசு - வார பலன்கள்

தனுசு- 2026 வார ராசிபலன் 13.9.2026 முதல் 19.9.2026 வரை

திருமணம் ஆன தம்பதிகள் மகிழ்ச்சியுடன் நிம்மதியாக வாழ்வார்கள்.

தனுசு

எண்ணங்கள் விருப்பங்கள் நிறைவேறும் வாரம். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார். இதுவரை காதல் திருமணத்திற்கு தடை விதித்த பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் சேர்ந்து வாழக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். திருமணம் ஆன தம்பதிகள் மகிழ்ச்சியுடன் நிம்மதியாக வாழ்வார்கள். விவாகரத்து வழக்குகள் தள்ளுபடி ஆகும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணை ஆகியவர்களால் சகாயமான பலன்கள் நடக்கும். கூட்டுத் தொழிலில் நிலவிய பகைமை மறையும். அதிக அளவில் முதலீடு செய்யக்கூடிய நல்ல தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். சமுதாய அங்கீகாரம் கூடும். செல்வாக்கு புகழ் அந்தஸ்தை அதிகரிக்க கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் தேடி வரும். சமுதாய அந்தஸ்து நிறைந்த புதிய நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். சிலருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் சீராகும். ஆனந்தத்தையும் அதிகரிக்க கற்பக விநாயகரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT