தனுசு - வார பலன்கள்

தனுசு- 2026 வார ராசிபலன் 1.11.2026 முதல் 7.11.2026 வரை

பணச் சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை.

தனுசு

தலைமைப்பதவி தேடி வரும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் 9ம் இடத்தில் கேதுவுடன் சேர்க்கை பெற்றுள்ளார். அரசு உத்தியோக வாய்ப்பு உறுதி. சிலருக்கு கவுரவப் பதவி, தலைமைப் பதவிகள் கிடைக்கும். தொழிலில் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வீர்கள். ஆலய தரிசனமும் புனித நதிகளில் நீராடும் பாக்கியமும் கிட்டும். புதிய பெரிய மனிதர்களின் நட்பால் அந்தஸ்து உயரும். தன ஸ்தானம் வலுப் பெறுவதால் நல்ல பொருளாதார அனுகூலம் கிடைக்கும். பணச் சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. பெண்களுக்கு தாய் வழி தீபாவளி சீர் வந்து சேரும். திரைக் கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் நல்ல வரமாக அமையும். திருமணத்தடை அகலும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். கோப உணர்வு குறைந்து விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகமாகும். 3.11.2026 அன்று அதிகாலை 3.46 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பெண்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். நினைப்பதை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமங்கலி பெண்களுக்கு தான தர்மம் வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT