தன்னம்பிக்கையுடன் செயல்படும் வாரம். ராசிக்கு செவ்வாய், சனி மற்றும் புதன் பார்வை உள்ளது. மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள், துயரங்கள், சங்கடங்கள் விலகும். உங்களை ஏளனமாக அலட்சியமாக நினைத்தவர்கள் திரும்பி பார்க்கும் வகையில் உங்களுடைய வளர்ச்சி கூட போகிறது. வீடு மாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் போன்ற நல்ல விதமான மாற்றங்கள் நடக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் தொடர்பான வெளிநாடு, வெளி மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்து மகிழ்வீர்கள். வியாபாரத்திற்கு புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் உண்டாகும். தொழிலில் பெரிய சாதனையை செய்யக் கூடிய வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கையே போராட்டமாக இருந்தவர்களுக்கு சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதியான வாழ்க்கை அமையும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் வைக்க வேண்டும். திருமணத் தடை அகலும். ஆடி மாத வெள்ளிக்கிழமை குல இஷ்ட தெய்வங்களை வழிபடவும்.