புதிய பாதையில் பயணிக்கத் துவங்கும் வாரம். ராசிக்கு தற்போது உச்ச குருவின் பார்வை இருப்பதால் மீன ராசிக்கு கிரக நிலவரம் மிக சாதகமாக உள்ளது. புதிய முயற்சிகள் வெற்றி தரும். முக்கிய காரியங்களை பணிகளை நிறைவேற்ற முடியும். தனி அடையாளத்துடன் இருப்பீர்கள். சிந்தனைகளும் எண்ணங்களும் உயர்வானதாக இருக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். திருமணம், குழந்தைப்பேறு கைகூடும். வெளிநாட்டு தொழில், உத்தியோக வாய்ப்பு கிடைக்கும். கண்ணில் உள்ள குறைபாட்டுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வீர்கள். ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து மருமகள், மருமகன் பேரன் பேத்தியை பார்ப்பீர்கள். சேமிக்கும் வகையில் வருமானம் உயரும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்து வீர்கள். சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்டமான சொத்து நகை, பணம் கிடைக்கலாம். 17.8.2026 மாலை 4.19 மணி முதல் 19.8.2026 நள்ளிரவு 2.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனம், புத்தி, செயல் இவற்றால் ஒன்றுபட முடியாது. ஆடி வெள்ளிக்கிழமை லலிதா சஹஸ்ரநாமம் கேட்கவும் அல்லது படிக்கவும்.