மீனம் - வார பலன்கள்

மீனம்: வார ராசிபலன் 22.3.2026 முதல் 28.3.2026 வரை

பெண்களுக்கு மாமனார், மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும்.

மாலை மலர்

மீனம்

சுமாரான வாரம். ராசியில் சூரியன் சனி சேர்க்கை உள்ளது. ஜென்மச் சனியின் ஆதிக்கம் உள்ளதால் முதலீட்டாளர்கள் இயன்றவரை பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். குடும்ப உறவுகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. விண்ணப்பித்த தொழில், வீட்டு, வாகன கடன் இந்த வாரத்திற்குள் கிடைத்து விடும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும். சீருடைப் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாறுதல் கிடைக்கும்.

பெண்களுக்கு மாமனார், மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். உடல், மனரீதியான சங்கடங்கள் அகலும். வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தவர்கள் மீண்டும் தாயகம் திரும்புவார்கள். சிலர் வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குடும்பத்தில் விசேஷ நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகள் நலனில் ஆர்வம் அதிகரிக்கும். கடன் பெற்று சொத்துக்கள் சேர்ப்பீர்கள். உயர்ரக வாகன வசதி அமையும். சனிக்கிழமை நவகிரகங்களை வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406