மீனம் - வார பலன்கள்

மீனம்- 2026 வார ராசிபலன் 8.11.2026 முதல் 14.11.2026 வரை

புதிய தொழில் முயற்சிக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும்.

மீனம்

பல விதமான நற்பலன்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வாரம். ராசியில் உள்ள சனி பகவானுக்கு செவ்வாயின் எட்டாம் பார்வை உள்ளது. இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். புதிய தொழில் முயற்சிக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும். எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. நாணயம் நீடிக்கும். அரசியல்வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்யும் சிந்தனை தோன்றும். வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும். சமூக ஆர்வலர்களுக்கு அரச கவுரவம் கிடைக்கும். 10.11.2026 அன்று அதிகாலை 2.48 வரை சந்திராஷ்டமம் உள்ளது. பெண்களால் பொருள் பணம் சார்ந்த விசயத்தில் அவமானம் உண்டு. ஆரோக்கியத்தில் சிறு சுணக்கம் உண்டாகும். அலைச்சல் கூடும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நினைப்பதும், நடப்பதும் முரண்பாடாக இருக்கும். சக்தி விரதம் இருந்து கரும்புச்சாறு அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT