மீனம் வார ராசிபலன் 
மீனம் - வார பலன்கள்

மீனம்- 2026 வார ராசிபலன் 28.6.2026 முதல் 4.7.2026 வரை

பண விஷயத்தில் மிகவும் விழிப்புடன் இருப்பது நல்லது.

மீனம்

சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் ஜென்ம சனியால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறையும். இறைவழிபாட்டில் ஆர்வம் கூடும். விற்பனை ஆகாத சொத்துக்கள் விற்கும். சிலர் கடன் பெற்று புதிய சொத்துக்கள் வாங்கலாம். சிலர் சொத்துக்களை விற்று கடன்களை அடைக்கலாம். சிலர் சொத்துக்களை அடமான வைத்து கடன் பெறலாம். அதிகப்படியான புதிய தொழில் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பண விஷயத்தில் மிகவும் விழிப்புடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்வுகள் கைகூடும். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் நீங்கி குதூகலம் உருவாகும். புத்திர பாக்கியம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவால் தடைப்பட்ட செயல்கள் கைகூடும். காணாமல் போன, கைமறதியாக வைத்த பொருட்கள் திரும்ப கிடைக்கும். தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு. ஜென்மச் சனியால் ஏற்படும் சோதனைகளை சாதனைகளாக மாற்ற காக்கைக்கு எள் கலந்த சாதம் மற்றும் தண்ணீர் வைக்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

SCROLL FOR NEXT