கடன் சுமை கூடும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் அதி சாரமாக ருண ரோக சத்ரு ஸ்தானம் செல்கிறார். உத்தியோக ஸ்தானத்திற்கு ராசி அதிபதி செல்வதால் உபயோகம் சார்ந்த மன உளைச்சல்கள் சீராகும். ஆன்ம பலம் பெருகும். உடலிலும், உள்ளத்திலும் உற்சாகம் கூடும். தோற்றப் பொலிவு ஏற்படும். உங்களின் தனித் திறமையால் சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். பல காலமாக சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்தவர்களுக்கு விசேஷமான சம்பள உயர்வு உண்டு. முக்கிய காரியங்கள் இழுபறியாகும். பிறர் விசயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.அரசின் சட்ட திட்டங்களை மதித்து நடக்கவும். தாய்வழிச் சொத்துப் பிரச்சனையில் எதிர்பாராத திருப்புமுனை உண்டாகும். சதா எதையாவது நினைத்து கவலைப்பட்டு நோயை வரவழைப்பீர்கள். நோய்க்கு வைத்தியம் செய்து கடன் உருவாகும். மனக் கட்டுப்பாடு குறையும். கடன் பிரச்சனை அதிகரிக்கலாம். பிள்ளைகளின் திருமணம் கல்வி ஆரோக்கியம் என்று ஏதாவது சுப செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். பௌர்ணமி அன்று மாலையில் சக்கரத்தாழ்வாரை வழிபட கடன் எதிரி தொல்லை குறையும்.