குலதெய்வ அனுகூலம் உண்டாகும் வாரம்.ராசி அதிபதி குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சமடைய போகிறார். இது போன்ற உன்னதமான காலம் மீண்டும் 12 வருடம் கழித்து உண்டாகும். இது மீன ராசியினருக்கு ஜென்மச் சனியின் தாக்கத்தை குறைத்து மன நிம்மதியை அதிகரிக்கும். குல கவுரவம் உயரும்.
தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற முடியும். சிலர் பயன் படாத சொத்துக்களை விற்று லாபம் பார்க்கலாம். அதை தொழிலில் மறுமுதலீடு செய்யலாம். அல்லது பங்கு பத்திரமாக மாற்றலாம். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.
கடன்களும், நோய்களும் குறைந்து ஆனந்தம் பெருகும். 27.5.2026 அன்று இரவு 7 மணி முதல் 30.5.2026 அன்று காலை 6:39 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிலும் கவனமாகவும் நிதானமுடனும் செயல்படுவது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் வரலாம். வைகாசி விசாகத்தன்று புனித நீரால் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.